Vaiyakanthanai Nadu Theerkavae – வையகந்தனை நடுத் தீர்க்கவே

Faith Score0
Faith Score0

Vaiyakanthanai Nadu Theerkavae – வையகந்தனை நடுத் தீர்க்கவே

பல்லவி

வையகந்தனை நடுத் தீர்க்கவே இயேசு
வல்லவர் வருகிறார் திருமறைக் கேற்க!

அனுபல்லவி

பொய்யுலகோர்களின் கண்களும் பார்க்க
பொற்பதி தனில் பரன் சேயரைச் சேர்க்க

சரணங்கள்
1. வானங்கள் மட மடவென் றகன்றிடவே,
மாநிலம் எரிந்து மாய்ந்தழிந்திடவே,
பானுடன் மதியுடு பஸ்பமாகிடவே,
பஞ்ச பூதங்களும் வெந்துருகிடவே – வைய

2. முக்கிய தூதனெக்காளமே தொனிக்க
முதல் மரித்தோரெல்லாந் தாமெழுந்திருக்க,
ஆக்ஷண முயிருளோர் மறுவுரு தரிக்க
ஆண்டவர் வருகிறார் பக்தர்கள் களிக்க – வைய

3. யாவரின் செய்கையும் வெளிப்படுவதற்கு
பரத்தின் புத்தகங்களுந் திறந்தவரவர்க்கு
பூவுலகில் யாவரும் நடந்து வந்ததற்கு
புண்ணிய னளவுடன் பலனளிப்பதற்கு! – வைய

4. அடைக்கலம் இயேசுவை அண்டினோர் நாமம்
அழிந்திடாதவர்களின் வாழ்வது க்ஷேமம்
படைத்திடுவாய் உன்னை இது நல்ல நேரம்
பற்றிடவா இப்போ இயேசுவின் பாதம் – வைய

Vaiyakanthanai Nadu Theerkavae – வையகந்தனை நடுத் தீர்க்கவே Lyrics in English

pallavi

vaiyakanthanai naduth theerkkavae Yesu
vallavar varukiraar thirumaraik kaerka!

anupallavi

poyyulakorkalin kannkalum paarkka
porpathi thanil paran seyaraich serkka

saranangal
1. vaanangal mada madaven rakantidavae,
maanilam erinthu maaynthalinthidavae,
paanudan mathiyudu paspamaakidavae,
panja poothangalum venthurukidavae – vaiya

2. mukkiya thoothanekkaalamae thonikka
muthal mariththorellaan thaamelunthirukka,
aakshana muyirulor maruvuru tharikka
aanndavar varukiraar paktharkal kalikka – vaiya

3. yaavarin seykaiyum velippaduvatharku
paraththin puththakangalun thiranthavaravarkku
poovulakil yaavarum nadanthu vanthatharku
punnnniya nalavudan palanalippatharku! – vaiya

4. ataikkalam Yesuvai anntinor naamam
alinthidaathavarkalin vaalvathu kshaemam
pataiththiduvaay unnai ithu nalla naeram
pattidavaa ippo Yesuvin paatham – vaiya

song lyrics Vaiyakanthanai Nadu Theerkavae – வையகந்தனை நடுத் தீர்க்கவே

@songsfire
more songs Vaiyakanthanai Nadu Theerkavae – வையகந்தனை நடுத் தீர்க்கவே
Vaiyakanthanai Nadu Theerkavae

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo