Skip to content

Vandhachinga vaanathulaa Naatchathiram song lyrics – வந்தாச்சுங்க வானத்துல நட்சத்திரம்

Vandhachinga vaanathulaa Naatchathiram song lyrics – வந்தாச்சுங்க வானத்துல நட்சத்திரம்

வந்தாச்சுங்க வானத்துல நட்சத்திரம் நட்சத்திரம் (2)
தந்தாச்சுங்க நல்ல செய்தியைத்தான்
உலக இரட்சகர் இயேசு பிறந்தாராம் (2)
தந்தானே தந்தானானே நானா தந்தானே தந்தானானேனா (2)

வழிகாட்டுதே வானத்துல மேகங்கள் நடுவில் மறையாமல் (2)
ஒளிவிளக்காய் வழிநடத்தும் இரட்சகர் இயேசுவின் நட்சத்திரம் (2)
தந்தானே தந்தானானே நானா தந்தானே தந்தானானேனா (2)

கோடானக்கோடி நட்சத்திரங்கள் வானத்தில் எத்தனை இருந்தாலும் (2)
இயேசுவுக்காய் ஜொலிக்கிறதே வசனத்தின் வழிகாட்டும் நட்சத்திரம் (2)
தந்தானே தந்தானானே நானா தந்தானே தந்தானானேனா (2)

மாளிகை மாடங்கள் வாசல்கள் நிற்காமல் வழிவிலகாமல் சென்றது நட்சத்திரம் (2)
மாட்டுத் தொழுவத்தில் மன்னவர் இயேசுவை கண்டதும் நின்றதே நட்சத்திரம் (2)
தந்தானே தந்தானானே நானா தந்தானே தந்தானானேனா (2)