Skip to content

Vellai Angi Tharithu – வெள்ளை அங்கி தரித்து

Vellai Angi Tharithu – வெள்ளை அங்கி தரித்து

1. வெள்ளை அங்கி தரித்து
சுடர் ஒளியுள்ளோர் ஆர்?
ஸ்வாமியை ஆராதித்து
பூரிப்போர் களிப்போர் ஆர்?
சிலுவையை எடுத்து,
இயேசுவின் நிமித்தமே
யுத்தம் பண்ணிப் பொறுத்து
நின்றோர் இவர்கள்தானே.
2. மா துன்பத்திலிருந்து
வந்து, விசுவாசத்தால்
தெய்வ நீதி அணிந்து
சுத்தமானார்; ஆதலால்
ஓய்வில்லாமல் கர்த்தரை
கிட்டி நின்று சேவிப்பார்
கர்த்தர் சுத்தவான்களை
சேர்த்து ஆசீர்வதிப்பார்.
3. அவர் ஜெயம் கொண்டோராய்
இனி சோதிக்கப்படார்
தீமை நீங்கித் தூயோராய்
பசி தாகம் அறியார்
மத்தியான உஷ்டணம்
இனி படமாட்டாதே;
அவர்கள் மெய்ப் பாக்கியம்
வளர்ந்தோங்கும் நித்தமே.
4. தெய்வ ஆட்டுக்குட்டியும்
அவர்களைப் போஷிப்பார்
ஜீவ தருக் கனியும்
ஜீவ நீரும் அளிப்பார்
துக்கம் துன்பம் ஒழித்து
குறை யாவும் நீக்குவார்
கண்ணீரையும் துடைத்து
அன்பினால் நிரப்புவார்.