Vin Mannai Aalum song lyrics – விண் மண்ணை ஆளும்

Vin Mannai Aalum song lyrics – விண் மண்ணை ஆளும்

1. விண் மண்ணை ஆளும் கர்த்தரே,
எவ்வாறு உம்மை நேசித்தே
துதிப்போம்? நன்மை யாவுமே
நீர் ஈகிறீர்.
2. உம் அன்பைக் கூறும் மாரியும்,
வெய்யோனின் செம்பொன் காந்தியும்,
பூ, கனி, விளை பயிரும்,
எல்லாம் ஈந்தீர்.
3. எம் ஜீவன், சுகம், பெலனும்,
இல்வாழ்க்கை, சமாதானமும்,
பூலோக ஆசீர்வாதமும்
எல்லாம் ஈந்தீர்.
4. சீர்கெட்ட மாந்தர் மீள நீர்
உம் ஏசு மைந்தனைத் தந்தீர்
மேலும் தயாள தேவரீர்
எல்லாம் ஈந்தீர்.
5. தம் ஜீவன், அன்பு, பெலனை
ஏழாம் மா நல் வரங்களை
பொழியும் தூய ஆவியை
அருள்கிறீர்.
6. மன்னிப்பும் மீட்பும் அடைந்தோம்
மேலான நம்பிக்கை பெற்றோம்
பிதாவே பதில் என் செய்வோம்
எல்லாம் ஈந்தீர்.
. தன்னயம் நஷ்டமாகுமே
உமக்களிக்கும் யாவுமே
குன்றாத செல்வம் கர்த்தரே
எல்லாம் ஈந்தீர்.
8. தர்மத்தைக் கடன் என்பதாய்
பதில் ஈவீர் பன்மடங்காய்
இக்காணிக்கையைத் தயவாய்
ஏற்றுக்கொள்வீர்.
9. உம்மாலே பெற்றோம் யாவையும்
தர்மத்தைச் செய்ய ஆசையும்
உம்மோடு நாங்கள் வாழவும்
அருள் செய்வீர்.

Scroll to Top