Vinthai Ithu Vinthai Song Lyrics

Vinthai Ithu Vinthai Song Lyrics

Vinthai Ithu Vinthai From Tamil Christmas Song Sung By. M.Rajasingh.

Vinthai Ithu Vinthai Christian Song Lyrics in Tamil

விந்தை இது விந்தை
சிந்தை மகிழும் விந்தை
வேந்தன் மனு உருவாய் இங்கே
பொன்னை அல்ல உன்னை
மண்ணை அல்ல நம்மை
தேடி ரட்சிக்கவே

இயேசு பிறந்தார்
நம் கிறிஸ்து பிறந்தார்
மீட்பர் பிறந்தார்
நல் மேய்ப்பர் பிறந்தார்

1. தாலாட்ட நாதியில்லை
சீராட்ட தாதியில்லை
ஏரோதின் ஆசியில்லை என்றாலும்
தாழ்மையின் ரூபம் கொண்டு
மாந்தர்மேல் அன்பு கொண்டு
ரட்சிக்க சித்தம் கொண்டு என்பதால்

2. அன்னைக்கு துணையுமில்லை
தந்தைக்கு யாருமில்லை
உரிமையின் உறவுமில்லை என்றாலும்
புறஜாதி மீட்டுக்கொள்ள
தம்மிடமாய் சேர்த்துக்கொள்ள
தலைமுறையாய் நடத்தி செல்ல என்பதால்

3. தலை சாய்க்க மஞ்சமில்லை
ஒளி ஏற்ற விளக்குமில்லை
குளிரகற்ற உடையுமில்லை என்றாலும்
நிலையில்லா உலகை காக்க
பகைஇல்லா அகத்தை காட்ட
எமை எல்லாம் பரத்தில் சேர்க்க என்பதால்


#songsfire

Trip.com WW

Scroll to Top