Viswasathodu Saatchi Pakarnthatae – விஸ்வாசத்தோடு சாட்சி பகர்ந்தே
1. விஸ்வாசத்தோடு சாட்சி பகர்ந்தே
தம் வேலை முடித்தோர் நிமித்தமே,
கர்த்தாவே, உம்மைத் துதி செய்வோம்
அல்லேலூயா! அல்லேலூயா!
2. நீர் அவர் கோட்டை, வல் கன்மலையாம்
நீர் யுத்தத்தில் சேனைத் தலைவராம்
நீர் காரிருளில் பரஞ்சோதியாம்,
அல்லேலூயா! அல்லேலூயா!
3. முன்நாளில் பக்தர் நற்போராடியே
வென்றார்போல் நாங்கள் வீரராகவே,
பொற்கிரீடம் பெற்றுக்கொள்வோமாகவே,
அல்லேலூயா! அல்லேலூயா!
4. இங்கே போராடி நாங்கள் களைத்தும்
உம் பக்தர் மேன்மையில் விளங்கினும்
யாவரும் உம்மில் ஓர் சபை என்றும்
அல்லேலூயா! அல்லேலூயா!
5. போர் நீண்டு மா கடூரமாகவே,
கெம்பீர கீதம் விண்ணில் கேட்குமே,
நாம் அதைக் கேட்டு, தைரியம் கொள்வோமே
அல்லேலூயா! அல்லேலூயா!
6. செவ்வானம் மேற்கில் தோன்றி ஒளிரும்
மெய் வீரருக்கு ஓய்வு வாய்த்திடும்,
சீர் பரதீசில் பாக்கியம் அமையும்
அல்லேலூயா! அல்லேலூயா!
7. மேலான பகல் பின் விடியும் பார்!
வென்றோர் கெம்பீரமாய் எழும்புவார்
மாண்புறும் ராஜா முன்னே செல்லுவார்,
அல்லேலூயா! அல்லேலூயா!
8. அநந்த கூட்டம் நாற்றிசை நின்றும்
திரியேகருக்கு ஸ்தோத்ரம் பாடியும்
விண் மாட்சி வாசலுள் பிரவேசிக்கும்
அல்லேலூயா! அல்லேலூயா!
Viswasathodu Saatchi Pakarnthatae – விஸ்வாசத்தோடு சாட்சி பகர்ந்தே Lyrics in English
1. visvaasaththodu saatchi pakarnthae
tham vaelai mutiththor nimiththamae,
karththaavae, ummaith thuthi seyvom
allaelooyaa! allaelooyaa!
2. neer avar koattai, val kanmalaiyaam
neer yuththaththil senaith thalaivaraam
neer kaarirulil paranjothiyaam,
allaelooyaa! allaelooyaa!
3. munnaalil pakthar narporaatiyae
ventarpol naangal veeraraakavae,
porkireedam pettukkolvomaakavae,
allaelooyaa! allaelooyaa!
4. ingae poraati naangal kalaiththum
um pakthar maenmaiyil vilanginum
yaavarum ummil or sapai entum
allaelooyaa! allaelooyaa!
5. por neenndu maa katooramaakavae,
kempeera geetham vinnnnil kaetkumae,
naam athaik kaettu, thairiyam kolvomae
allaelooyaa! allaelooyaa!
6. sevvaanam maerkil thonti olirum
mey veerarukku oyvu vaayththidum,
seer paratheesil paakkiyam amaiyum
allaelooyaa! allaelooyaa!
7. maelaana pakal pin vitiyum paar!
ventor kempeeramaay elumpuvaar
maannpurum raajaa munnae selluvaar,
allaelooyaa! allaelooyaa!
8. anantha koottam naattisai nintum
thiriyaekarukku sthothram paatiyum
vinn maatchi vaasalul piravaesikkum
allaelooyaa! allaelooyaa!
song lyrics Viswasathodu Saatchi Pakarnthatae – விஸ்வாசத்தோடு சாட்சி பகர்ந்தே
@songsfire
more songs Viswasathodu Saatchi Pakarnthatae – விஸ்வாசத்தோடு சாட்சி பகர்ந்தே
Viswasathodu Saatchi Pakarnthatae
