
Yaaraal Neer Christian Song Lyrics

Yaaraal Neer Christian Song Lyrics
Yaaraal Neer Song Lyrics From Tamil Christian Song Sung By. S. Selvakumar.
Yaaraal Neer Christian Song Lyrics in Tamil
யாரால் நீர் சிலுவையில் தொங்கினீர்
என்னாலல்லவோ தொங்கினீர் (2)
நான் செய்த பாவத்தால் பாவமறியா
உம்மை தொங்க விட்டேனே (2)
1. பாவம் செய்தது நானல்லவா
தண்டிக்கப்பட்டது நீரா ஐயா
துன்மார்க்கம் செய்தது நானல்லவா
துன்புறுத்தப்பட்டது நீரா ஐயா
எனக்காய் பலியானீரே என் பாவம் சுமந்தீரே
இயேசய்யா (2) என்னை மன்னியும் (6)
2. அநியாயம் செய்தது நானல்லவா
அடிக்கப்பட்டது நீரா ஐயா
கொடுமைகள் செய்தது நானல்லவா
கொல்லப்பட்டது நீரா ஐயா
நான் விடுதலையாகவே நீர் சிறைப்பட்டுப்போனீரே
இயேசய்யா (2) என்னை கழுவிடும் (2) உம் இரத்தத்தால்
3. அக்கிரமம் செய்ததென் கையல்லவா
ஆணிகள் பாய்ந்தது உம் கையிலா
கறைப்பட்டு போனதென் காலல்லவா
காயங்கள் பட்டது உம் கால்களா
ரத்தம் வழிந்தோடவே முள் முடி உம் சிரசிலா
இயேசய்யா (2) உம்மைப் போலொரு தெய்வம் இல்லையே (2)
4. பாவம் இனிமேல் செய்யாமல்
பரிசுத்தமாய் இனி வாழ்வேனே
இனி உம்மை நோக செய்யாமல்
உம் விருப்பம் தான் இனி செய்வேனே
எனக்காய் நீர் மரித்தீரே இனி உமக்காய் நான் வாழ்வேனே
இயேசய்யா (2) நான் செய்வேனே இனி செய்வேனே உம் ஊழியம் (2)
Christians songs lyrics
#songsfire