Yakopa Pola Naan Poraduvaen – யாக்கோபைப் போல நான் போராடுவேன்

Yakopa Pola Naan Poraduvaen – யாக்கோபைப் போல நான் போராடுவேன்

யாக்கோபைப் போல நான் போராடுவேன்
எலியாவைப் போல நான் ஜெபித்திடுவேன்
விடமாட்டேன் விடமாட்டேன் யாக்கோபை
நான் விட மாட்டேன்

அன்னாளைப் போல ஆலயத்தில்
அழுது நான் ஜெபித்திடுவேன்
என் துக்கம் சந்தோஷமாய்
மாறும் வரை ஜெபித்திடுவேன்

கார்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்
அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன்
எலியாவின் தேவனே
இறங்கி வாருமையா

தாவீதைப் போல அனுதினமும்
துதித்து நான் மகிழ்ந்திடுவேன்
கோலியாத் வந்தாலும்
இயேசு நாமத்திலே முறியடிப்பேன்

Scroll to Top