Skip to content

Yesappa Unga Namathil – இயேசப்பா உங்க நாமத்தில்

Yesappa Unga Namathil – இயேசப்பா உங்க நாமத்தில்

இயேசப்பா உங்க நாமத்தில்
அற்புதங்கள் நடக்குது
பேய்கள் ஓடுது நோய்கள் தீருது
பாவங்கள் பறந்தோடுது

உந்தன் வல்லமைகள் குறைந்து
போகவில்லை-உந்தன்
உயிர்த்தெழுதல் மகிமை மாறவில்லை

துன்பங்கள் தொல்லைகள்
வியாதிகள் வறுமைகள்
வந்தாலும் என் இயேசு குணமாக்குவார்
விசுவாசம் நமக்குள் இருந்தால் போதும்
தேவ மகிமையைக் கண்டிடுவோம்

மந்திர சூனியம் செய்வினைக் கட்டுகள்
இன்றே நம் இயேசு உடைத்தெறிவார்
ஆவியானவர் நமக்குள் இருப்பதால்
உலகத்தை நாம் கலக்கிடுவோம்

சாத்தானின் சதிகளா சாபத்தின் வாழ்க்கையா
இன்றே நம் இயேசு உடைத்தெறிவார்
துதியின் ஆயுதம் நமக்குள் இருப்பதால்
அசுத்த ஆவியைத் துரத்திடுவோம்