Yesu Devanai Thuthithiduvom – MPA Church Song Lyrics

Yesu Devanai Thuthithiduvom – MPA Church Song Lyrics

Yesu Devanai Thuthithiduvom Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.MPA Church

Yesu Devanai Thuthithiduvom Christian Song Lyrics in Tamil

இயேசு தேவனைத் துதித்திடுவோம்
இயேசு ராஜனை வாழ்த்திடுவோம் – 2
இதயம் பொங்க நன்றியுடனே
போற்றி உயர்த்தி பணிந்திடுவோம் – 2

1.வார்த்தை வடிவாய் வந்தவரை
வாதை பிணியைத் தீர்த்தவரை-2
கண்ணின் மணிபோல் காத்த தயவை
கருணை உருவைத் துதித்திடுவோம் – 2 – இயேசு தேவனை

2.அடிமை ரூபம் எடுத்தவரை
அகிலம் பணிந்திடச் செய்தவரை – 2
உயர்ந்த நாமம் பெற்றுவிளங்கும்
உன்னதர் அவரைப் போற்றிடுவோம் – 2 – இயேசு தேவனை

3.இருளை நீக்கும் மாஜோதியாய்
உலகில் வந்த அருள் வடிவை – 2
ஜீவ ஓளியாய் திகழும் அவரை
கிருபை உருவைத் துதித்திடுவோம் – 2 – இயேசு தேவனை

4.பாவ சாப மரணமதை
ஜெயித்து வென்று எழுந்தவரை – 2
மகிமை சூழ திரும்ப வந்திடும்
வேந்தன் அவரைத் துதித்திடுவோம் – 2 – இயேசு தேவனை

Yesu Devanai Thuthithiduvom Christian Song Lyrics in English

Yesu thevanai thuthithiduvom
Yesu rajanai vazhthiduvom – 2
Idhayam ponga nandriyudane
Potri uyarthi paninthiduvom – 2

1.Varthai vadivaai vanthavarai
Vathai piniyai theernthavarai – 2
Kannin manipol kaththa thayavai
Karunai uruvai thuthithiduvom – 2 – Yesu thevanai

2.Adimai roopam eduththavarai
Agilam paninthida seythavarai – 2
Uyarntha namam petru vilangum
Unnathar avarai potriduvom – 2 – Yesu thevanai

3.Irulai neekkum majothiyaai
Ulagil vantha arul vadivai – 2
Jeeva oliyaai thigazhum avarai
Kirubai uruvai thuthithiduvom – 2 – Yesu thevanai

4.Pava saapa maranamathai
Jeyiththu vendru ezhunthavarai – 2
Magimai soozha thirumpa vanthidum
Venthan avarai thuthithiduvom – 2 – Yesu thevanai


#songsfire

Try Amazon Fresh

Scroll to Top