Yesu Endhan Vazhvin song lyrics – இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்

Yesu Endhan Vazhvin song lyrics – இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்

இயேசு எந்தன்
வாழ்வின் பெலனானார்
எனக்கென்ன ஆனந்தம்

1. எந்தன் வாலிப காலமெல்லாம்
எந்தன் வாழ்க்கையின் துணையானார்
உம் நாமமே தழைத்தோங்க
நான் பாடுவேன் உமக்காக

எந்தன் இதயமே உம்மைப் பாடும்
எந்தன் நினைவுகள் உமதாகும்

2. பெரும் தீமைகள் அகன்றோட
பொல்லா மாயைகள் மறைந்தோட
உமதாவியின் அருள் காண
வரும் காலங்கள் உமதாகும்

3. இந்த உலகத்தை நீர் படைத்தீர்
எல்லா உரிமையும் எமக்களித்தீர்
உம் நாமமே தழைத்தோங்க
நான் பாடுவேன் உமக்காக

Scroll to Top