
Yesuvae Um Thayavugal Periyathae song lyrics – இயேசுவே உம் தயவுகள் பெரியதே

Yesuvae Um Thayavugal Periyathae song lyrics – இயேசுவே உம் தயவுகள் பெரியதே
இயேசுவே உம் தயவுகள் பெரியதே
யாருக்கும் தெரியாத
வாழ்க்கை வாழ்ந்தவன் நான்
யாருக்கும் தெரியாமல்
மறைவில் ஒளிந்தவன் நான்-2
நீதான் வேண்டும் என்று
ஒரு சத்தம் கேட்டது
கேட்டவுடன் மறைவை விட்டு வெளியில் வந்து பார்த்த நான்
இயேசுவே உம் தயவுகள் பெரியதே
இயேசுவே உம் இரக்கங்கள் ஆச்சரியமே
இயேசுவே உம் உள்ளம் உயர்ந்ததே
இயேசுவே நீரே சிறந்தவரே-2
1.நல்லவனை நீர் கண்டிருந்தால்
அதில் துளியும் கூட நானில்லை
நீதிமானை நீர் பார்த்திருந்தால்
அதின் வாசனைக்கூட எனக்கில்லை-2
நல்லவராம் நீர் என்னை
நல்லவனாக்கிட முடிவெடுத்து
நீதிமானாய் என்னை மாற்ற
நீரே உம்மை தந்தீரே
இயேசுவே உம் தயவுகள் பெரியதே
இயேசுவே உம் இரக்கங்கள் ஆச்சரியமே
இயேசுவே உம் உள்ளம் உயர்ந்ததே
இயேசுவே நீரே சிறந்தவரே-2
2.உத்தமனை நீர் கண்டிருந்தால்
உண்மையாக அது நானில்லை
சன்மார்க்கனை நீர் பார்த்திருந்தால்
சற்றும் கூட நானில்லை
உத்தமராம் நீர் என்னை
உத்தமமாக்கிட உறுதி கொண்டு
உடன்படிக்கையின் இரத்தம் கொடுத்து
உம்முடன் இணைய வைத்தீரே
இயேசுவே உம் தயவுகள் பெரியதே
இயேசுவே உம் இரக்கங்கள் ஆச்சரியமே
இயேசுவே உம் உள்ளம் உயர்ந்ததே
இயேசுவே நீரே சிறந்தவரே-2