Yesuvae Unthan Roobamae – இயேசுவே உந்தன் ரூபமே

Yesuvae Unthan Roobamae – இயேசுவே உந்தன் ரூபமே

Yesuvae Unthan Roobamae – இயேசுவே உந்தன் ரூபமே

1. இயேசுவே உந்தன் ரூபமே எந்தன்
கண்கட் கெத்துணை அழகாம்
சீஷனாம் நானும் உந்தனைப் போல
முற்றிலும் ஆக அருளும்
2. அன்பு மயமாய் உந்தனைக் கண்டோன்
உம்மில் அன்பற்றிருப்பானோ?
தன்னயம் நீக்கி சுத்தி செய்துமே
அன்பெனில் ஜ்வாலிக்கச் செய்யும்
3. பிதாவின் மகிமை யாவும் துறந்து
நரனாய் பூவில் வந்தவா!
பாதகன் நானும் தாழ்மை தனிலே
பரனைப் போல ஆக்குமேன்
4. பாவப் பரிகாரப் பலியாக
குருசில் தொங்கிய இயேசுவே
கோபிக்காமல் நான் மன்னித்திட
உம் ஆவியை ஈயும் அப்பனே!
5. வேத வாக்கியம் பாலியம் முதல்
நேசித்தாராய்ந்த ஞானியே
பக்தன் நானும் திருவசனத்தை
நித்தம் ஆராய்ந்தொழுகச் செய்
6. பெலவீனராம் சீடர்க்காவியின்
பெலம் ஈந்த தகைமை போல்
உலகெங்கும் சாட்சியாக நானும்
நிலைக்கத் தாரும் சக்தியே

Scroll to Top