Yesuvae Unthan Sinthanai – இயேசுவே உந்தன் சிந்தனை

Yesuvae Unthan Sinthanai – இயேசுவே உந்தன் சிந்தனை

1. இயேசுவே உந்தன் சிந்தனை
என் நெஞ்சுக்கின்பமாம்
ஆனால் உம் தரிசனமே
அதிலும் இன்பமாம்
2. வார்த்தையால் பாட ஒண்ணாதே
நெஞ்சில் அடங்காதே
உம் இனிய நாமமின்றி
வேறுண்டோ இரட்சகா
3. உடைந்த நெஞ்சின் நம்பிக்கை
எளியோர்க் கின்பமே;
இடறு வோர்க்கு இரங்குவார்
நாடுவோர்க்கு நண்பர்
4. இவற்றைக் கண்டடைந்தோர்க்கு
நாவால் சொல்ல ஒண்ணா;
இயேசுவின் அன்பே என் சொல்வேன்
அன்பரே அறிவார்
5. இயேசுவே நீர் என் சந்தோஷம்
நீரே என் பொக்கிஷம்
இயேசுவே நீர் என் மகிமை
நித்யம் நித்தியமாய்

Scroll to Top