Yudheya Viduthiyila song lyrics – யூதேயா விடுதியில இயேசுவுக்கு

Yudheya Viduthiyila song lyrics – யூதேயா விடுதியில இயேசுவுக்கு

பல்லவி
ஏங்க… யூதேயா விடுதியில இயேசுவுக்கு இடமில்ல…
மரியின் வலியில் முன்னணை மூடவில்ல…
சிங்க… இயேசுவின் பிறப்பால் மன்னன் தூங்கவில்ல…
வந்த.. மேய்ப்பரின் வாழ்த்தில் குழந்தை அழவே இல்ல… – 2

அனுபல்லவி
இல்லவே இல்லையே
ஏதேன் தோட்டம் இல்லையே
நோவா பேழை இல்லையே
அரண்மனையும் இல்லையே
அங்கீகாரமில்லையே
சாதகமே இல்லையே
பின்ன இயேசு ஏம்ப்பா இந்த உலகத்தில் வந்தாரே…

சரணங்கள்
1.ஏன்னா… மேய்ப்பர்கள தேடி யாரும் போனதில்ல
தாழ்ந்த… ஏழைகளை சந்திக்க யாரும் விரும்பினதில்ல
இப்போ… இயேசு வராட்டா நமக்கு வெளிச்சம் இல்ல
இந்த இயேசுவின் பிறப்புல பாவிக்கும் அழிவே இல்ல – 2

வந்தாரு… வந்தாரு…
கரடு… முரட… கண்டாரு…
நாடு காடு போனாரு…
நல்ல கொள்கை விதைச்சாரு…
சம உரிமை சொன்னாரு…
சத்தியத்தில் நடந்தாரு…
நம் சாபம் நீக்கும் பலியாகி சென்றாரு…

வானிலே மகிமை இந்த பூமியிலே சமாதானம்
என்றென்றும்
உண்டாகட்டும்… – 2
– வந்தாரு… வந்தாரு

YUDHEYA VIDUTHIYILA NALLA NILAMAGU NANBA christmas song

    Scroll to Top