
Githiyon Nee Githiyon Nee – கிதியோன் நீ கிதியோன் நீ
Deal Score0

Githiyon Nee Githiyon Nee – கிதியோன் நீ கிதியோன் நீ
கிதியோன் நீ கிதியோன் நீ
தேவனால் அழைக்கப்பட்டு அனுப்பப்பட்டவன் நீ
வாலிபனே வாலிபனே
ஊழியம் செய்திட நீ ஒப்புக்கொடுப்பாயா
- உணவுக்கு போராடும் தேசத்திலே
உண்மை தெய்வத்தை நீ சொல்லணுமே
விளைச்சலை கெடுக்கின்ற எதிரிகளை
விரட்டணுமே இயேசு நாமம் சொல்லி - தரித்திர ஆவிகளைத் துரத்தணுமே
விக்கிரக ஆவிகளை விரட்டணுமே
கர்த்தர் மனம் இறங்க கதறணுமே
நாடு நலம்பெற ஜெபிக்கணுமே - சுயம் என்ற மண்பாண்டம் உடைத்துவிடு
பயமின்றி திருவசனம் அறிக்கையிடு
மாம்சத்தைப் பலியாக ஒப்புக்கொட
புளியாத அப்பாமாக மாறிவிடு - இருக்கின்ற பெலத்தோடே புறப்பட்டுபோ
எதிரியை தோற்கடித்து ஜனங்களை மீட்பாய்
படைத்தவர் உனக்குள்ளே இருப்பதனால்
பராக்கிரமசாலியே பயமே வேண்டாம்