வாரீரோ செல்வோம் – vareero selvom
வாரீரோ! செல்வோம் – வன்குருசடியில் சரணங்கள் என்னென்று அறியார் – மண்ணோர் செய்த பாவம் மன்னியப்பா வென்ற – மத்தியஸ்தனைப் பார்க்க – வாரீரோ அன்று கள்ளனோடு – இன்று பரதீசில் வந்திடுவாய் என்ற – வல்லவனைக் காண – வாரீரோ இவனுன்சேய் என்றும் – அவளுன் தாய் என்றும் புவிவாழ்வீரென்ற – புண்ணியனைப் பார்க்க – வாரீரோ ஒன்னாரைக்கைவிட – எண்ணமில்லா நாதன் என்னையேன் கைவிட்டீர் – என்ற உரை கேட்க – வாரீரோ தேவ கோபமூண்டு – ஏகன் நா வறண்டு தாகமானேன் என்று – […]