Skip to content

Deva anbidhuvey song lyrics – தேவ அன்பிதுவே தூய அன்பிதுவே

Deva anbidhuvey song lyrics – தேவ அன்பிதுவே தூய அன்பிதுவே

தேவ அன்பிதுவே தூய அன்பிதுவே
தேடி வந்தென்னை மீட்ட அன்பே
குருசில் தொங்கியே குருதி சிந்தியே
குற்றங்கள் மண்ணித்த பேரன்பே

தூரமாய் ….உம்மை விட்டு போனாலும்
தூபமாய் …..என்னை பின்தொடர்ந்தீரே
நன்றியாலே எந்தன் உள்ளம் பொங்கிடுதே தேவா
நானிலத்தில் உம்மை போல நேசர் யாருண்டு

1. சிரசில் முள்முடி சிவப்பங்கி தரித்து
சிலுவையில் தொங்கினீர் நாதரே
உந்தன் தழும்புகளால் நான் சுகமானேன்
உந்தன் ரத்தத்தால் நான் சுத்தமானேனே

2. மனிதனின் அன்பது மாயை மாறி போகுமே
மண்ணிலே தாயன்பும் மாறுமே
மரணம் நேரிடில் ஒன்றும் உடன் வராதே
மாறாத உம் அன்பு போதுமே