Skip to content

Meendum Paduvom Metparanbai – மீண்டும் பாடுவோம் மீட்பரன்பை

1. மீண்டும் பாடுவோம் மீட்பரன்பை
என்றும் அவ்வன் பழியாததே!
வெட்டுண்ட தேவாட்டுக்குட்டியின்
இரத்தத்தை வாழ்த்திப் புகழுவோம்

பல்லவி

இயேசுவின் இரத்தத்தால்
சுத்திகரிப்பு நமக்குண்டு!

2. சுத்தமும் சுகமும் உண்டாகும்
அத்தன் இரத்தத்தில் மூழ்குவோர்க்கு
நித்தமும் மா சந்தோஷ முண்டு
இத்தரையில் அவர் இரத்தத்தால்! – இயேசுவின்

3. இங்கவ ரன்பை ருசிக்கவே
பொங்குதே ஆனந்தம் புண்யனால்!
அங்குள்ளோர் பாட்டில் நாம் கூடினால்
ஆர் அம் மகிமையை கூறுவார்! – இயேசுவின்

4. யுத்தம் முடிந்தது என்று நம்
கர்த்தன் சொல்லும்வரை முன் செல்வோம்!
நித்திய மகிமை வீட்டிலே
சத்யன் நம்மை அழைத்துச் செல்வார் – இயேசுவின்

5. அதால் பரிசுத்தம் என்ற நம்
அமர்க் கொடியும் பறக்கட்டும்!
அந்தத்தில் அவர் கையினின்று
அழகான கிரீடம் பெறுவோம்! – இயேசுவின்