Mun Sellu Mun Sellu Veera – முன் செல்லு முன் செல்லு வீரா

Faith Score0
Faith Score0

Mun Sellu Mun Sellu Veera – முன் செல்லு முன் செல்லு வீரா

பல்லவி
முன் செல்லு முன் செல்லு வீரா! – என்றும்
இரட்சண்ய சேனையில் இரத்தம் தீயுடன்!
கண்ணிகள்
1. இருளான பாதையில் வந்தால் – அவர்
அருளினால் உன்னைப் பிடித்திழுப்பாரே!
எதிரிகள் சுற்றி வந்தாலும் – நீ
திகிலடையாமலே எதிர்த்து முன்செல்லு – முன்
2. மேகம்போல் துன்பம் வந்தாலும் – நீ
வேகமாய் இயேசுவைப் பிடித்துக் கொள்ளலாம்;
பாவத்தின் சோதனை வந்தால் – அவர்
பாதத்தைப் பிடித்து ஜெயம் பெறலாமே – முன்
3. அழுகையும் துக்கம் வந்தாலும் – அவர்
இருகரத்தா லுந்தன் கண்ணீரைத் துடைப்பார்;
சிலுவையை இங்கே சுமந்தால் – உந்தன்
சிரசிற்குப் பொன்முடி தரிப்பார் மோட்சத்தில் – முன்

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo