Thudhigal Oyaadhu lyrics – என் துதிகள் ஓயாது Tamil christian song Lyrics, Tune, composed and sung by Rev.John Jebaraj & Sis.Jeniffer Steffy
மீன்களை பிடித்தவன்
மனுஷனை பிடிக்கவே
மாற்றின
இயேசு என் படகில் உண்டு
நிச்சயம்
ஒரு நாள் மறுத்தலிப்பேன்
என்று அறிந்தும்
அழைத்தவர் அருகில் உண்டு
நான் வீசும் வலைகள் எல்லாம் வெறுமையாய் வந்தாலும்
என்னோடு அவர் இருக்க குறையேது
புயல் அடித்தாலும் அலையாடித்தாலும்
என் துதிகள் ஓயாது
கரை தெரியாமல் கண்ணலைந்தாலும்
என் துதிகள் ஓயாது
என் நம்பிக்கை அவமானாலும்
என் துதிகள் ஓயாது
கை விட தெரியாதவரை
விட்டு ஓட முடியாது
உம்மை விட்டால் நம்புவதற்கு
வேற (எனக்கு) யாரும் கிடையாது – 2
கடலிலே மிதந்திடும்
படகை நான் நம்பல
கடல் மீது நடப்பவரை நம்பி வந்தேன்
நிந்திட தெரிந்த
மீனவனாய் இருந்தும்
நீர் வந்து கைதூக்க காத்திருந்தேன்
நான் மூழ்கும் செய்திய
ஊர் பேச விடமாட்டிர்
அழைத்தவர் கைவிடலென்னு பேச வைத்தீர்.
Thudhigal Oyaadhu song lyrics in English
அழகான தேவ மனிதர்கள் அழகான பாடல் வரிகள் அழகான குரல் வளம் அழகான இடங்கள் அழகான ஒளிப்பதிவு இயேசுகிறிஸ்து கொடுத்தது இயேசு கிறிஸ்துவுக்கே!
நீதிமான் என்றும் கைவிடப்படுவதில்லை பொய்யானது ஒன்றும் அவன் மேல் பட்டாலும் அது நிலைக்கிறது இல்லை சுட்ட பின் நல்ல பொன்னாக மாறுவது போல் தம்பி ஜான் ஜெபராஜ் அவர்கள் நல்ல பொன்னாக வெளியே வந்தீர்கள் கர்த்தர் உங்களோடு இருப்பாராக உங்களுக்காக நாங்கள் அதிகமாக ஜெபித்தோம் உங்கள் பிறந்தநாளில் கர்த்தர் உங்களை அதிகமாக ஆசீர்வதிக்க வாழ்த்துகிறோம் இன்னும் நீங்கள் செய்ய வேண்டிய காரியம் ஏகப்பட்ட காரியம் இருக்கிறது எலியாவுக்கு தேவன் சொன்னது போல் எழுந்து புசி நீ பயணிக்க வேண்டியத தூரம் அதிகம் என்று சொன்னார் அவனமாகவே எழுந்து நில் சகோதரரே நீங்கள் பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகமாய் இருக்கிறது எல்லா நாளும் எல்லா வேலையும் எல்லா விஷயத்திலும் ஊழியங்களிலும் கர்த்தர் உன்னோடு இருப்பாராக என்று வாழ்த்துகிறோம் ஆமென்
சிறைப்பட்டுப்போனவன் தீவிரமாய் விடுதலையாவான், அவன் கிடங்கிலே சாவதுமில்லை, அவனுடைய அப்பம் குறைவுபடுவதுமில்லை. ஏசாயா 51