Yesuvae Vazhventu kattrukonden – இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன்

Faith Score0
Faith Score0

Yesuvae Vazhventu kattrukonden – இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன்

இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன்
அவரால் அத்தனையும் பெற்றுக்கொண்டேன் – (2)
என் ஜெபமெல்லாம் வீணாகப் போகல
என் விசுவாசும் என்றுமே தோற்கல – (2)

நான் ஜெபிக்கும் நேரம் அக்கினியாய் மாறும்
தடையெல்லாம் விடையாக மாறிப்போகும்
அபிஷேகமெல்லாம் நதியாகப் பாயும்
பரலோகம் எனக்காக வேலை செயும் – (2)

1. உம்முன் நிற்கும் ஒவ்வொரு நொடியும்
என்னைப் பெலவானாய்க் காண்கிறேன் – (2)
என் நெரத்தை முதலீடு செகிறேன்
மகிமையை அறுவடை செய்கிறேன் – (2) – நான் ஜெபிக்கும்

2. துதியும் ஜெபமும் பெருகப் பெருக
எங்கள் சபையும் பெருகுதே – (2)
தேசத்தின் கட்டுகள் மாறுதே
அபிஷேம் நுகங்களை முறிக்குதே (என்) – (2) – நான் ஜெபிக்கும்

3. அந்நிய பாஷை பேசப் பேச
ஆவியும் அனலாய் மாறுதே – (2)
நான்சொல்ல பரலோகில் கட்டுமே
நான் சொல்ல பரலோகில் அவிழுமே – (2) – நான் ஜெபிக்கும்

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo