Allaeluyaa Jeyamae Amalan Ezhunthaar – அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார்

Faith Score0
Faith Score0

Allaeluyaa Jeyamae Amalan Ezhunthaar – அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார்

பல்லவி
அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார் அதிசயமே
அனுபல்லவி
பொல்லாப் பேய் நடுங்கிவிழப்
பொற்பரனின் சேயர் மகிழ. – அல்
சரணங்கள்
1. பாவம் பேயோடு மரணம்,
பாழன் பேயினது அரணம்,
சீவபரனால் திரணம்,
திடமாயடைவோம் அவர் சரணம். – அல்
2. வலுசிங்கம் சிறையாச்சு,
மாற்றானின் வல்லமை போச்சு,
அலகையுளதோ பேச்சு
அதுவிடலாமோ இனி முச்சு. – அல்
3. திருநாதர் பேயிருபேர்
செய்தார் கொடியதா மொருபோர்
அருணாதர் தாம் ஜெயம் நேர்
அடைந்தார் ஓ சபையே களிகூர். – அல்

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo