Skip to content

Thayanaval Maranthalum – தாயானவள் மறந்தாலும்

Thayanaval Maranthalum – தாயானவள் மறந்தாலும்

தாயானவள் மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை
சேயாகுமுன் தெரிந்தழைத்தீர்
நீர் என்னை விடுவதில்லை (2)

தஞ்சம் தஞ்சம் இயேசு
எந்தன் நெஞ்சின் தெய்வம் இயேசு (2)

1.கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை (2)
கண்ணிமையில் காப்பதுபோல்
கர்த்தர் நம்மைக் காத்தாரே (2)

தஞ்சம் தஞ்சம் இயேசு
எந்தன் நெஞ்சின் தெய்வம் இயேசு (2)

2.உள்ளங்கையில் வரைந்தவரே
ஒரு நாளும் கை விடாதவரே (2)
வழித்தப்பி போனவர்க்கு
வழித்துணை ஆனவரே (2)

தஞ்சம் தஞ்சம் இயேசு
எந்தன் நெஞ்சின் தெய்வம் இயேசு (2)

3.இன்று நேசிக்கும் மனிதரெல்லாம்
என்றும் நேசிக்க முடிவதில்லை (2)
என்றும் நேசிக்கிறார்
இயேசு என்றும் ஜீவிக்கிறார் (2)

தஞ்சம் தஞ்சம் இயேசு
எந்தன் நெஞ்சின் தெய்வம் இயேசு (2)